சினிமா

சென்சார் போர்ட் மீது வித்யா பாலன் விமர்சனம்

சென்சார் போர்ட் மீது வித்யா பாலன் விமர்சனம்

webteam

சென்சார் போர்ட் மீது பாலிவுட் நடிகை வித்யாபாலன் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

மெர்சல் தணிக்கை சான்றிதழ் பற்றிய விவாதம் தமிழ்நாட்டில் வலுவாக ஒலிக்க தொடங்கியுள்ள சமயத்தில் சென்சார் போர்ட் பற்றிய தன் விமர்சனத்தை வித்யாபாலன் முன் வைத்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்சார் போர்டு உறுப்பினர்கள் பலருக்கு தங்களின் பணி என்ன என்பது பற்றிகூட தெரியாது. சென்சாருக்கு வரும் எல்லா திரைப்படங்களையும் அவர்கள் பார்ப்பதில்லை. ஏதாவது பிரச்சினையோ, சர்ச்சையோ எழுந்தால் மட்டுமே அந்தப் படத்தை பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார். மத்திய சென்சார் போர்டு உறுப்பினராக கடந்த ஆகஸ்ட் மாதம் வித்யா பாலன் நியமிக்கப்பட்டார். தற்போதும் சென்சார் போர்டு உறுப்பினராக உள்ள அவரே இது போல் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.