சினிமா

”‘அத்ரங்கி ரே’ பார்த்தேன்; தனுஷ் ஜீனியஸ்” - விக்கி கெளஷல் பாராட்டு

sharpana

’அத்ரங்கி ரே’ படத்திற்காக நடிகர் தனுஷை பாராட்டியுள்ளார் பாலிவுட் நடிகர் விக்கி கெளஷல்.

தனுஷ்-சாரா அலிகான் - அக்‌ஷய் குமார் நடிப்பில் சமீபத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான ’அத்ரங்கி ரே’-’கலாட்டா கல்யாணம்’ பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. ஒரே சாதி - ஒரே மதத்திற்குள் காதலித்து திருமணம் செய்வது காதலே இல்லை என்பதையும் ஆணவக்கொலை மீதான எதிர்ப்பையும் அழுத்தமாக ’அத்ரங்கி ரே’வில் சமூக அக்கறையோடு அழுத்தமாக பதிவு செய்திருந்தார் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். இந்த நிலையில், படத்தைப் பார்த்துவிட்டு பாலிவுட் நடிகர் விக்கி கெளஷல் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.

”சாரா அலிகான் கடினமான கதாபாத்திரத்தில் உங்களை அர்பணித்து அற்புதமாக நடித்துள்ளீர்கள். தனுஷ் சொல்லவே வேண்டாம். நீங்கள் ஜீனியஸ். ஆனந்த் எல்.ராய் சார் உங்கள் அடுத்தப் படத்தில் எனக்கும் வாய்ப்புக் கொடுங்கள்” என்று பாராட்டி வாய்ப்பும் கேட்டுள்ளார் விக்கி கெளஷல். சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்த ‘சர்தார் உத்தம்’ படம் விக்கி கெளஷல் நடிப்பில் கடைசியாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.