சினிமா

என்.டி.ஆர் பட தொடக்க விழாவில் எம்.ஜி.ஆர்!

webteam

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் இன்று தொடங்கப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.

புராண, இதிகாச கேரக்டர்கள் மட்டுமின்றி சமூக சீர்திருத்தப் படங்களிலும் நடித்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் எனப்படும் என்.டி.ஆர். தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார். கிருஷ்ணர், துரியோதனன், கர்ணன் என பல புராண கேரக்டர்களில் அவர் இன்னும் வாழ்ந்து வருகிறார். 

திரைத் துறை மட்டுமின்றி அரசியலிலும் காலூன்றி வெற்றி பெற்றவர். காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த ஆந்திர மாநிலத்தில், தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி, வெறும் 9 மாதங்களில் ஆட்சியைப் பிடித்து சாதனைப் படைத்தார். அவர் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவில் இப்போது ஆட்சி செய்து வருகிறது. இவரது மருமகன் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார்.

இந்நிலையில் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக அவரது மகனும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகருமான பாலகிருஷ்ணா கூறியிருந்தார்.

அதன்படி இந்தப் படம் இன்று தொடங்கப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடக்கி வைத்தார். படத்தை தேஜா இயக்குகிறார். இதில் எம்.ஜி.ஆர் போல வேடமணிந்த ஒருவர், படத்தில் பங்கேற்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. வரும் 30-ம் தேதியில் இருந்து வழக்கமான ஷூட்டிங் தொடங்குகிறது. தொக்க விழாவில் ஏராளமான திரையுலகினர் மற்றும் என்.டி.ஆர் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் படம் தமிழ், இந்தியிலும் உருவாக இருப்பதாக படக்குழுவின் கூறினர்.