சினிமா

விமானத்தில் வெளியிடப்பட்ட "சூரரைப் போற்று" இசை ஆல்பம் !

விமானத்தில் வெளியிடப்பட்ட "சூரரைப் போற்று" இசை ஆல்பம் !

webteam

நடுவானில்  சூரரை போற்று படத்தின் வெய்யோன் சில்லி பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

நடிகர் சூர்யாவின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று'. இப்படத்தை துரோகம், இறுதிச் சுற்று போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார். "ஏர் டெக்கான்" உரிமையாளரான ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசர் கடந்த மாதம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது. இதனையடுத்து சூர்யா பாடிய ‘மாறா’சிங்கள் ட்ராக்கும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி படக்குழு சார்பில் காதலர் தின பரிசாக இன்று சூரரைப் போற்று படத்தின் இராண்டாம் சிங்கள் பாடலான ‘வெய்யோன் சில்லி’ வெளியிடப்படும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை விமான நிலையததில் நடக்க இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று ‘சூரரைப் போற்று’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இதில் சூர்யா, "ஸ்பைஸ் ஜெட்" விமானத்தின் நிர்வாக இயக்குனர் அஜய் சிங் உள்பட பலரும் கலந்துக் கொண்டனர். மேலும் அகரம் சார்பில் 100 பள்ளி மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது விமான நிலையத்தில் படக்குழு இசை வெளியிடும் வீடியோ சமூகவலைதளத்தில் வைராலாகி வருகிறது. அத்துடன் சில மணி நேரத்திற்கு முன்னதாக வெளியான  "வெய்யோன் சில்லி" வீடியோ பாடலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்தப் படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இந்தி நடிகர் பரேஷ் ராவல், தெலுங்கு நடிகர் மோகன் பாபு மற்றும் காளி வெங்கட், கருணாஸ் எனப் பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.