படப்பிடிப்பின் போது சண்டைப் பயிற்சியாளர் உயிரிழப்பு புதிய தலைமுறை
சினிமா

திரைப்படப் படப்பிடிப்பின் போது சண்டைப் பயிற்சியாளர் உயிரிழப்பு!

இயக்குநர் பா.ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படப் படப்பிடிப்பு விழுந்தமாவடி கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தின் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். படப்பிடிப்பில் நடந்த விபத்துக்குப் பிறகு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் அமைந்துள்ள அளப்பகுதியில் நீலம் production தயாரிப்பில் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 10.07.25 முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்போது, சண்டை காட்சி ஒன்றின்போது சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜ் காரில் இருந்து குதித்த போது தவறி விழுந்ததில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு அங்கு அவரை பரிசோதனை செய்துள்ளனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் உயிரிழந்தது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே விபத்து ஏற்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.