சினிமா

இந்தி நடிகர் ஷாருக் கானை சந்தித்தது ஏன்? வெற்றி மாறன் விளக்கம்!

இந்தி நடிகர் ஷாருக் கானை சந்தித்தது ஏன்? வெற்றி மாறன் விளக்கம்!

webteam

இயக்குநர் வெற்றிமாறன், பிரபல பாலிவுட் ஹீரோ ஷாருக்கானை சந்தித்தது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான், ’ஸீரோ’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சரியாக ஓடாததால், அடுத்த படங்களில் நடிக்காமல் இருக்கிறார். அவரது அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் அவர் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ஷாருக்கானை, வெற்றி மாறன் சந்தித்தப் புகைப்படங்கள் இணையத்தில் பரவின. இதனால் ’அசுரன்’ படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக் நடிப்பதாகக் கூறப்பட்டது.

இதுபற்றி வெற்றி மாறனிடம் கேட்டபோது, ‘அசுரன் படத்தை ஷாருக் கான் பார்த்து ரசித்திருக்கிறார். அவருக்கு படம் பிடித்திருந்ததால், என்னைச் சந்திக்க விரும்பினார். இதையடுத்து அவரைச் சந்தித்தேன். அதற்கு மேல் வேறு ஒன்றுமில்லை’’ என்றார்.