சினிமா

அடுத்த வாரத்தில் வெளியாகிறது வெங்கட் பிரபுவின் புதுப்பட டைட்டில்

அடுத்த வாரத்தில் வெளியாகிறது வெங்கட் பிரபுவின் புதுப்பட டைட்டில்

கலிலுல்லா

மாநாடு வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கியுள்ள புதிய திரைப்படத்தின் தலைப்பு அடுத்த வாரம் வெளியாகிறது.

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் தமிழகத்தில் சுமார் 55 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மன்மதலீலை என்ற திரைப்படத்தை விரைவில் வெளியிட ராக்போர்ட் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

மேலும் அதற்கான வேலைகளிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். இதுவரை மன்மதலீலை என்ற தலைப்பை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அடுத்த வாரம் தலைப்புடன் கூடிய முதல் பார்வையை வெளியிட உள்ளனர். அந்த திரைப்படத்தில் அசோக்செல்வன் நாயகனாக நடித்துள்ளார். மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளிவரும் வெங்கட்பிரபு படம் என்பதால் அதற்கான வியாபாரம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.