சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு செட் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் 'வேலைக்காரன்'. படத்திற்காக சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் போடப்பட்டிருந்தது. அந்த செட் தற்போது பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இன்று (30-12-2017) முதல் மூன்று தினங்கள் இந்த செட்டை பார்வையிடலாம்.
இதனால் ஏராளமான ரசிகர்கள் வேலைக்காரன் செட்டை பார்வையிட்டு புகைப்படமும் எடுத்து செல்கின்றனர். அதுமட்டுமில்லாமல் அவர்கள் அந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுதவிர #VelaikkaranSetVisit என்கிற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரென்டாகி வருகிறது.