சினிமா

வேலைக்காரன் படத்தின் 2வது பாடல் வெளியானது

வேலைக்காரன் படத்தின் 2வது பாடல் வெளியானது

webteam

சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் 2வது பாடல் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் வேலைக்காரன். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ‘கருத்தவனெல்லாம் கலீஜா’ என்ற பாடல் ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் 2வது பாடலான, ‘இறைவா’ பாடல் சற்று நேரத்திற்கு முன்பு இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கும் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை அளித்து வருகின்றனர்.