சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறுகிறது.
மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தில், நயன்தாரா முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில், இந்தப் படத்தின் மூலம் வில்லனாகத் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன், பிரகாஷ்ராஜ், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி படம் ரிலீஸாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. படத்தை தயாரிக்கும் '24 ஏஎம் ஸ்டுடியோ' தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள ‘கருத்தவன்லாம் கலீஜா’ மற்றும் ‘இறைவா’ ஆகிய இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளன.