சினிமா

த்ரிஷாவின் முன்னாள் காதலர் திருமணம்

த்ரிஷாவின் முன்னாள் காதலர் திருமணம்

webteam

தயாரிப்பாளர் வருண்மணியன் - கனிகா குமரன் திருமணம் அக்டோபர் மாதம் சென்னையில் நடக்கிறது.

ரேடியன் மீடியா சார்பில், 'வாயை மூடி பேசவும்', 'காவியத்தலைவன்' படங்களை தயாரித்தவர் வருண்மணியன். தொழில் அதிபரான இவர், நடிகை த்ரிஷாவை காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களுக்கு 2015-ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் திடீரென திருமணம் நின்றது. இதையடுத்து வருண் மணியன் நடிகை பிந்து மாதவியை காதலிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இதை மறுத்தார் வருண் மணியன். இந்நிலையில் வருண் மணியன், கனிகா குமரனை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். 

கனிகா, மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.கந்தசாமியின் பேத்தி. இவரது தந்தை கேபிகே குமரன் தொழிலதிபர்.

‘கடந்த சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணம் அக்டோபர் மாதம் சென்னையில் நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர்’ என்று வருண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.