சினிமா

மலையாள ’அப்பா’வில் வரலட்சுமி

மலையாள ’அப்பா’வில் வரலட்சுமி

Rasus

சமுத்திரக்கனி தமிழில் இயக்கி நடித்திருந்த படம், ‘அப்பா’. தம்பி ராமையா, நமோ நாராயணா, வினோதினி, நசாத் உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.

இந்தப் படம் இப்போது மலையாளத்தில் ஆகாச மிட்டாயி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. சமுத்திரக்கனி இயக்குகிறார். ஜெயராம் ஹீரோவாக நடிக்கிறார். அவர் மனைவியாக வரலட்சுமி நடிக்கிறார். இவர் நடிக்கும் இரண்டாவது மலையாளப் படம் இது. ஏற்கனவே, கமலா என்ற படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார் வரலட்சுமி.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘சமுத்திரக்கனி இதில் நடிக்கக் கேட்டதும் உடனே சம்மதித்தேன். ஏனென்றால் அவர் படங்கள் எனக்குப் பிடிக்கும். ஏப்ரல் முதல் தேதியில் இருந்து ஷூட்டிங் தொடங்குகிறது’ என்றார். வரலட்சுமி நடிக்க இருந்த கேரக்டரில் ஆஷா சர்த் நடிப்பதாக முதலில் கூறப்பட்டிருந்தது.