பிரிந்து தவித்த வரலட்சுமியும், விஷாலும் மீண்டும் இணைகிறார்கள். சண்டைக்கோழி பார்ட்-2 படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. இந்தப்படத்தின் ஷூட்டிங் ஜூலையில் தொடங்க இருக்கிறது.
இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் மற்றொரு பாத்திரத்தில் நடிக்க வரலட்சுமியை நாடியிருக்கிறார் லிங்குசாமி. விஷாலுடன் ஆயிரம் பகை இருந்தாலும் அந்த பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் வரலட்சுமி. தமிழ் தெலுங்கில் பிஸியாக இருக்கும் அவர் சண்டைக்கோழி -2 படத்தில் அழுத்தமான கேரக்டர் என்பதால் ஒப்புக்கொண்டாராம்.