தயாரிப்பாளர்களின் மோசமான நடவடிக்கையால் ‘அப்பா’ படத்தின் மலையாளத்தில் ரீமேக்கில் இருந்து வரலட்சுமி சரத்குமார் வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழில் வெளியான ‘அப்பா’ படம் மலையாளத்தில் ‘ஆகாச மிட்டாயீ’ என்ற பெயரில் படமாக்கப்படவுள்ளது. சமுத்திரகனி இயக்கும் இந்தப் படத்தில், ஜெயராம் கதாநாயகனாகவும், வரலட்சுமி கதாநாயகியாகவும் நடிக்க ஒப்பந்தமாகினர். ஆனால், வரலட்சுமி தன் இடையை குறைத்ததால் ஆகாச மிட்டாயீ படத்தின் கதாபாத்திரத்திற்கு ஒத்துவர மாடார் என்பதால் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் சுதேவ் தெரிவித்தார்.
இதனை மறுத்துள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார், ஆண் ஆதிக்கம் காட்டும் நற்பண்பு அற்ற தயாரிப்பாளர்களுடன் பணியாற்ற முடியாது என்றும் அதனால் படத்தை விட்டு தாமாக வெளியேறி விட்டதாகவும் தெரிவித்தார். தனது உணர்வை புரிந்து கொண்ட நடிகர் ஜெயராம், இயக்குனர் சமுத்திரகனி ஆகியோருக்கும் வரலட்சுமி சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.