நடிகர் சசிகுமார் ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
‘சுப்ரமணியபுரம்’ படம் மூலமாக இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமான சசிகுமார், சமுத்திரக்கனி இயக்கிய ‘நாடோடிகள்’ படத்தி நடித்ததின் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தன்னை ஒரு நடிகராக முன்னிறுத்திக்கொண்ட சசிகுமார், தொடர்ந்து ‘போராளி’ ‘குட்டிப்புலி’, ‘சுந்தரபாண்டியபுரம்’, ‘பிரம்மன்’, ‘கிடாரி’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்தார்.
இவரும் பிரபல இயக்குநருமான வெற்றிமாறனும் கைக்கோர்க்க உள்ள நிலையில், தற்போது சசிகுமார் ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற புதியப்படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். இந்தப்படத்தை ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார். கதா நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி நடிக்க இருக்கின்றனர்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். ‘விஸ்வரூபம்- 2’ ‘கடாரம் கொண்டான்’ உள்ளிட்டப் படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 4 Monkeys Studio நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.