சினிமா

''சிறப்பான ஒரு அப்டேட் '' - வலிமை பட நடிகர் போட்ட ட்விட்டால் தெறிக்கும் ட்விட்டர்

''சிறப்பான ஒரு அப்டேட் '' - வலிமை பட நடிகர் போட்ட ட்விட்டால் தெறிக்கும் ட்விட்டர்

webteam

வலிமை படத்தில் வில்லனாக நடித்து வரும் கார்த்திகேய கும்மகொண்டா ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அவருடைய ட்வீட் இப்போது வைரலாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கும் அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கியது. பிறகு கொரோனா தாக்குதல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் வலிமை படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்க உள்ளது.

பிப்ரவரி 2021 க்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக வலிமை படத்தில் வில்லனாக நடித்து வரும் கார்த்திகேய கும்மகொண்டா ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அவருடைய ட்வீட் இப்போது வைரலாகியுள்ளது.

அதில், கொஞ்சம் பொறுமையா இருங்க. நீங்க எதிர் பார்த்ததவிட சிறப்பான ஒரு அப்டேட் வர போகுது. வெய்ட்டிங் பார் தல தரிசனம் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். #WaitingForThalaDharisanam என்ற ஹேஸ்டேக்கையும் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.