சினிமா

ஆண்டாள் சர்ச்சைக்கு இடையில் வைரமுத்து எழுதிய பாடல்

ஆண்டாள் சர்ச்சைக்கு இடையில் வைரமுத்து எழுதிய பாடல்

webteam

ஆண்டாள் சர்ச்சைக்கு இடையில் பாடலாசிரியர் வைரமுத்து பாடல் ஒன்றை எழுதி முடித்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படம் கண்ணே கலைமானே, இந்தப் படத்தினை இயக்குநர் சீனுராமசாமி இயக்கி வருகிறார். அந்தப் படத்திற்கான திரைக்கதையை சமீபத்தில் எழுதி முடித்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது அப்படத்திற்கான பாடல் ஒன்றை கவிஞர் வைரமுத்து எழுதி முடித்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அவர், “முதல் பாடல் பிறந்தது. யுவன் சங்கர் ராஜா-வைரமுத்து கூட்டணி மூன்றாவது முறையாக உங்கள் வாழ்த்துகளுடன் இணைகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஆண்டாள் சம்பந்தமாக வைரமுத்து பேசியிருந்து சர்ச்சையாகி வரும் வேளையில் ஒரு பாடலை மிக தெளிவாக வைரமுத்து எழுதி முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.