பாலிவுட்டில் தனக்கு எதிராக சதி நடப்பதாக ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்ட நிலையில், அன்பு ரகுமான் அஞ்ச வேண்டாம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
‘ஆஸ்கார் நாயகன்’, ‘இசைப்புயல்’ என்றெல்லாம் இசையுலக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஏ.ஆர்.ரகுமான், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு குழு வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், இந்தி சினிமாக்களில் தனக்கு பணியாற்றும் வாய்ப்புகளை அந்த குழு தடுத்து வருவதாகவும் ரகுமான் குற்றஞ்சாட்டியது இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, ரகுமானுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர்
‘’அன்பு ரகுமான்!
அஞ்சற்க.
வட இந்தியக் கலையுலகம்
தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு
ஆண்மான்களை ஆதரிப்பதில்லை.
இரண்டுக்கும் உயிர்வாழும்
எடுத்துக்காட்டுகள் உண்டு.
ரகுமான்! நீங்கள் ஆண்மான்;
அரிய வகை மான்.
உங்கள் எல்லை
வடக்கில் மட்டும் இல்லை.’’
என்று குறிப்பிட்டுள்ளார்.