சினிமா

“என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள்”- பெட்ரோல் விலை குறித்து வைரமுத்து ட்வீட்

“என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள்”- பெட்ரோல் விலை குறித்து வைரமுத்து ட்வீட்

webteam

பெட்ரோல் விலை உயர்வு குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 91.68 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 85. 01 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நாளுக்கு நாள் பெட்ரோல் டீசலின் விலை உயர்ந்துவருவதற்கு கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு; பெட்ரோல் இருந்தால் வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.