‘வடசென்னை’ மொத்த மூன்று பாகங்களாக வெளிவர உள்ளதாக நடிகர் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வடசென்னை’. அந்தப் படத்திற்கான சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது 3 பாங்களாக ‘வடசென்னை’ வெளிவர உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தப் படம் 3 பாகங்களாக வெளியாக உள்ளது என பலரும் கூறி வந்த நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக அமைந்தது தனுஷின் பேச்சு.
மேற்கொண்டு பேசிய அவர், “இந்தப் படத்தை ஒருநேரத்தில் முழுமையாக சொல்ல முடியாது. அப்படி சொன்னால் ஒருநாள் முழுக்க 6 இடைவேளை விட்டுவிட்டுதான் சொல்ல முடியும். ஆகவே 3 பார்ட் ஆகஎடுக்கலாம்னு முடிவு பண்ணோம். இதை ஏதோ வியாபார ரீதிக்காக 3 பார்ட் ஆக எடுக்கவில்லை. வேற வழியில்லாமல் 3 பாகமாக எடுத்திருக்கோம். இப்போது முதல் பாகத்தை வெளியிடுகிறோம். இரண்டாம் பாகத்திற்கான 20 சதவீத காட்சிகள் எங்களிடம் இப்போதைக்கு உள்ளது. அதற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளோம். அதற்கு நடுவில் எங்களுக்கே ‘வடசென்னை’யில் இருந்து ஒரு பிரேக் தேவை படுகிறது. ஆகவே நடுவில் நானும் வெற்றிமாறனும் இணைந்து வேறு ஒரு படம் எடுக்க இருக்கிறோம். அதற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளது.” என்றார்.