சினிமா

“வாத்தி ரெய்டு பாடல்.. இன்று இரவு 8.30 மணிக்கு”.. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்..!

“வாத்தி ரெய்டு பாடல்.. இன்று இரவு 8.30 மணிக்கு”.. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்..!

rajakannan

மாஸ்டர் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் இன்று இரவு 8.30 மணிக்கு வெளியாகவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத் தட்ட முடிந்துவிட்ட நிலையில் அதன் ப்ரமோசன் வேலைகளிலும் ஒருபுறம் படக்குழு களமிறங்கியுள்ளது.

இதனிடையே, கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி "let me sing a kutti story" என்ற பாடல் வெளியானது. அதற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகளும் கூட "let me sing a kutti story" பாடலைப் போலவே தனி அடையாளங்களை தாங்கி நின்றது. பின்னர், மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடலான ‘வாத்தி coming’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இதுஒரு பாடலைப் போல் அல்லாமல் தீம் இசையைப் போல் இருந்தது. இதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று இரவு 8.30 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. வாத்தி ரெய்டு என இந்தப் பாடலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியான உடன் விஜய் ரசிகர்கள் உற்சாக மடைந்துள்ளனர். இதனையடுத்து, VaathiRaid என்ற ஹேஷ்டேக்கில் அவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். #VaathiRaid என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நாளை நடைபெறவுள்ள நிலையில், படத்தின் மூன்றாவது பாடலும் இன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, ஏப்ரல் 9ம் தேதி திரைப்படம் வெளியாகவுள்ளது.