சினிமா

’வாத்தி கம்மிங்’ பாட்டு வேற மாறி ; பாராட்டிய அஸ்வின்!

’வாத்தி கம்மிங்’ பாட்டு வேற மாறி ; பாராட்டிய அஸ்வின்!

sharpana

’மாஸ்டர்’ படத்தின் ’வாத்தி கம்மிங்’ பாடலை கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டியிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ’மாஸ்டர்’ பொங்கலையொட்டி கடந்த 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. நேற்று ஓடிடியிலும் வெளியானது.

இப்படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் உலகம் முழுக்க வைரல் ஹிட் அடித்து குத்தாட்டம் போட வைத்துக்கொண்டிருக்கிறது. கடந்தவாரம் ‘குட்டி ஸ்டோரி’ பாடலை வெளியிட்ட படக்குழு ‘வாத்தி கம்மிங்’ வீடியோ பாடலையும் வெளியிட்டிருக்கிறது. இப்பாடலின், நடன அமைப்பும் இசையும் தமிழக இளைஞர்களின் காலர்டியூனாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வேற மாறி’ என்று வாத்தி பாடலை பகிர்ந்து பாராட்டியிருக்கிறார்.