கமல்ஹாசன் - கிரேஸி மோகன் காம்போவில் வந்த படங்கள் அனைத்தும் பக்கா எண்டெர்டெயினரா இருந்தாலும் 2002ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்துல வெளியான பஞ்சதந்திரம் எப்போதுமே மாஸ்டர்பீஸ்னுதான் சொல்ல முடியும்.
அந்த அளவுக்கு எத்தனை முறை பாத்தாலும் அள்ள அள்ள கிடைக்குற அட்சய பாத்திரம் மாதிரி வயிறு குலுங்க குலுங்க சிரிக்குற அளவுக்கு படம் நெடுக காமெடியின் அம்சம் அமோகமா இருக்கும்.
படம் வெளியாகி இன்றோடு 20 வருஷம் ஆகியிருக்க நிலையில, படத்த பத்தின கதை எல்லாருக்குமே பெரும்பாலும் தெரிஞ்சுருக்கும். ஆனால் இப்போ நாம பாக்க போறதே பஞ்சதந்திரம் படத்தோட வேற டைமென்ஷன்தான்.
அது என்னனா? கல்ட் example ஆக இருக்குற பஞ்சத்தந்திரம் படத்துக்கு வசனம் எழுதிய கிரேஸி மோகன் அதுல ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிக்க இருந்தாரு. அது எந்த கதாப்பாத்திரம்னு தெரியுமா? பஞ்சத்தந்திரம் படம் வெற்றிபெற முக்கிய காரணம் என்ன? எதனால இத்தனை வருஷமாகியும் இந்த படம் நிலைச்சு இருக்கு? இப்படி பல சுவாரஸ்யமான தகவல்கள பத்திதான் பார்க்க போறோம்.
ஹாலிவுட்டிலும் செரி, இந்தியாவில் உள்ள எல்லா cinema woodலயும் சரி மல்டிகாஸ்ட் படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம்தான் இருக்கு. ஆனால் எத்தனை நட்சத்திரங்கள் இணைந்து நடிச்ச படம் வந்தாலும் அதில் எல்லாமும் சக்சஸ் ஆகுறது குறைவுதான்.
அந்த கருத்துல இருந்து தப்பி காமெடி படத்துக்கான கல்ட் படமாவே கமல்ஹாசனின் பஞ்சதந்திரம் இருக்கும். இந்த படத்த வெறும் கமல்ஹாசனை மட்டுமே மையப்படுத்தாம படம் முழுக்க வர சின்ன சின்ன கதாப்பாத்திரமும் அத்தனை அம்சமாக கதையோட பொருந்தி போற அளவுக்கு எல்லாருமே தத்தம் பங்க நேர்த்தியா கொடுத்துருப்பாங்க.
பஞ்சதந்திரம் படம் ஆரம்பிச்சதுல இருந்து முடியுற வர (ஹாஸ்பிடல்ல கமல் பேசுற லாங் எமோஷன் சீன் தவிர) எல்லா இடத்துலயும் காமெடி பூரணமா நிறைஞ்சுருக்கும். அதுவும் அந்த சமயத்துல நடக்குற சம்பவங்கள் மாதிரி ஸ்கிரிப்ட்டிலாம் அத்தனை பக்காவா இருக்கும்.
குறிப்பா, பெங்களூர் ஹோட்டல்ல மேகி (ரம்யா கிருஷ்ணன்) டெட் பாடியை மறைக்குற சீன், ட்ரேட்மார்க் முன்னாடி பின்னாடி காமெடி, ஸ்ரீமன் வீட்ல நடக்குற உகாதி ஃபங்ஷன்னு இப்டி அடுக்கிட்டே போகலாம். அந்த அளவு கனக்கச்சிதமா காமெடியா கிரேஸி மோகன், கமல், கே.எஸ்.ரவிக்குமார்னு எல்லாருமே ஒருங்கிணைச்சு பொருத்தியிருப்பாங்க.
கிரேஸி மோகன் வசனம் எழுதினதோட இந்த படத்துல முக்கியமான கேரக்டர்ல நடிக்க இருந்தாரு. அது எந்த கேரக்டர் தெரியுமா?
மேகியோட டெட் பாடியை கார்ல மறைச்சு எடுத்துட்டு வரப்போ கமல் & கோ போலீசா வர வாசு விக்ரம்கிட்ட சிக்குற சீன் வரும். அந்த முன்னாடி பின்னாடி காமெடி சீன்ல வாசு விக்ரமுக்கு பதிலா கிரேஸிதான் முதல்ல நடிக்க வைக்குறதா இருந்தாங்க. ஆனா தவிர்க்க முடியாத காரணத்தால அது நடக்காம போச்சு.
ஆனா அந்த காமெடி சீக்வன்ஸ் மட்டும் எப்போ பார்த்தாலுமே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. அந்த சீன்ல நடிக்காம போச்சேனு கிரேஸி மோகனே பின்னாள்ள வருத்தப்பட்டதாவும் சொல்லியிருக்காராம்.
அதேபோல, ஐங்குறுந்தாடிகளில் ஒருத்தர வேதம் கேரக்டர்ல யூகி சேதுக்கு பதிலாக முதல்ல பிரபல கிரிக்கெட்டரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்த நடிக்க வெக்க அணுகியிருக்காங்க. அதுவும் வேற காரணத்தால நடக்கல.
அடுத்ததா, சுலபமா படத்தோட கதை மக்கள் மத்தியில நிலைச்சதுக்கு கேரக்டர்களோட பெயர் முக்கிய காரணமா பார்க்கப்படுது. அதன்படி படம் தொடக்கத்துல இருந்து சிம்ரன் தன் குழந்தைக்கு கதை சொல்றதாகட்டும், கமலுக்கு ராம் (ராமச்சந்திர மூர்த்தி), சிம்ரனுக்கு மைதிலி, ரம்யா கிருஷ்ணனுக்கு மேக் அலைஸ் மரகதவள்ளி, யூகி சேதுக்கு வேதம், ஜெயராம் அய்யப்பன் நாயர், ரமேஷ் அரவிந்த்க்கு கணேஷ், ஸ்ரீமனுக்கு ஹனுமந்த், நாகேஷ்க்கு பார்த்தசாரதினு எல்லா பெயருமே புராண கதைகள்ள வர பெயராவே வெச்சிருப்பாங்க.
இப்படி பல காரணிகளால சூழப்பட்ட பஞ்சத்தந்திரம் படம், காமெடி படங்களை இயக்க எத்தனிக்கும் எந்த இயக்குநர்களுக்கும் ஒரு பாடமாகவே இருக்கும்னு சொன்னா அது மிகையாகாது.
ALSO READ: