சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'தலைவர் 168'. இன்னும் தலைப்பிடப்படாத இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அதில் நடிகை கீர்த்தி சுரேஷ், குஷ்பு பங்கேற்று நடித்து வருகின்றனர். வழக்கம்போல் இப்படம் குடும்ப சென்டிமெண்ட் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
சென்டிமெண்ட் காட்சிகளுடன் குடும்பங்களுக்கான திரைப்படங்களை கொடுக்கும் சிவா, அதே பாணியில் இந்த திரைப்படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்டிமெண்ட், குடும்பக்கதை என கமர்சியல் படம் என்பதால் நடிகர் ரஜினிகாந்தும் உற்சாகத்துடன் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பாடல் காட்சி ஒன்று உருவாக்கப்பட்டதாகவும், அது ‘விஸ்வாசம்’ படத்தின் தூக்குதுரை பாடல் ஸ்டைலில் துள்ளலான பாடல் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புனேவில் 20 நாட்கள் நடைபெற உள்ளதாகவும், இந்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.