அண்ணாதுரை படம் வெற்றியடைந்தால் வருமான வரி சோதனையும் வரும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
'எமன்' படத்தைத் தொடர்ந்து 'அண்ணாதுரை' மற்றும் 'காளி' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்தார் விஜய் ஆண்டனி. இதில் 'அண்ணாதுரை' படத்தின் பணிகள் முழுமையாக முடிவுற்று நவம்பர் 30-ம் தேதி வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "அண்ணாதுரை படம் வெளிவரும் நேரத்தில் இந்த தலைப்பின் காரணமாக கண்டிப்பாக சர்ச்சை வரும் என நம்புகிறேன். படம் வெற்றியடைந்தால் நிச்சயம் வருமான வரி சோதனையும் வரும்" என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், ஒருமுறை தணிக்கை செய்து சான்றிதழ் பெற்ற திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது என தெரிவித்தார்.
'அண்ணாதுரை' படத்தில் விஜய் ஆண்டனி, டயானா சம்பிகா, மஹிமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.