சினிமா

அட, அது மலையாள ரீமேக்காம்!

webteam

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படம், மலையாளத்தில் வெளியான, ’மகேஷின்டே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரியதர்ஷன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்திருந்தார் உதயநிதி. இந்தப் படத்தை, மூன் ஷூட் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சந்தோஷ் தயாரிக்க இருப்பதாகவும் கூறியிருந்தார். இது மலையாளத்தில் ஹிட்டான, ’மகேஷின்டே பிரதிகாரம்’ என்ற படத்தின் ரீமேக் என்பது இப்போது தெரியவந்துள்ளது. இதில் பகத் பாசில் ஹீரோவாக நடித்திருந்தார். அபர்ணா பாலமுரளி, அனுஸ்ரீ உட்பட பலர் நடித்திருந்தனர். திலீஷ் போத்தன் இயக்கியிருந்தார். 
காமெடி படமான இதில் பகத் பாசில் நடித்திருந்த கேரக்டரில் உதயநிதி நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்குகிறது. தமிழுக்காக, கதையில் சில மாற்றங்களை செய்துவருகிறார் பிரியதர்ஷன்.