சினிமா

உதயநிதி ‘கண்ணே கலைமானே’ஷூட்டிங் ஆரம்பம்

உதயநிதி ‘கண்ணே கலைமானே’ஷூட்டிங் ஆரம்பம்

webteam

உதயநிதி ஸ்டாலினின் நடிக்கும் ‘கண்ணே கலைமானே’ ஷூட்டிங் தொடங்கியதாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படம் ‘கண்ணே கலைமானே’. இதில் உதயநிதி ஸ்டாலில் நாயகனாக நடிக்கிறார். இதன் திரைக்கதையை சமீபத்தில் எழுதி முடித்திருப்பதாக ட்விட்டரில் இயக்குநர் தெரிவித்திருந்தார். மேலும் இப்படத்தின் முதல் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதி முடித்திருப்பதாகவும் அறிவித்திருந்தார். 
இந்நிலையில்  இப்படத்திற்கான பூஜை போட்டப்பட்டுள்ளது. கூடவே மதுரையில் படப்பிடிப்பும் தொடங்கி உள்ளது. அதற்கான புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் படக்குழு பகிர்ந்து கொண்டுள்ளது.  படத்தில் நடிக்க உள்ள திரைநட்சத்திரங்கள் யார்? தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்பது குறித்த செய்தி வெளியாகவில்லை. விரைவில் அதற்கான முழு தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.