நாளுக்கு நாள் நயன்தாராவின் மார்க்கெட் உச்சம்தொட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாள சினிமாவிலும் இளம் ஹீரோக்கள், வயதான ஹீரோக்களுக்கு அவரது ஜோடிப்பொருத்தம் கச்சிதமாக அமைந்து விடுவதால் அனைவராலும் விரும்பப்படும் நாயகியாக வலம் வருகிறார்.
இன்றைய நிலவரப்படி நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாராதான் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார். ஒரு படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் நடித்த ஒரு விளம்பரப்படத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் பெற்ற செய்தி கோடம்பாக்கத்துக்கே ஷாக் கொடுத்திருக்கிறது.
நயன்தாரா ஒரு டிடிஎச் விளம்பரத்தில் நடித்திருந்தார் அல்லவா? அந்த ஷூட்டிங்கில் நயன்தாரா கலந்து கொண்டது இரண்டே நாட்கள். அதற்கு அவர் பெற்ற சம்பளம் 5 கோடி ரூபாய். நயன்தாரா தற்போது சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், இமைக்காநொடிகள் ஆகிய படங்களிலும், தெலுங்கில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.