சினிமா

டிவி நடிகர், நடிகை கார் விபத்தில் உயிரிழப்பு

டிவி நடிகர், நடிகை கார் விபத்தில் உயிரிழப்பு

webteam

கன்னட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த நடிகை ரச்சனா நடிகர் ஜீவன் ஆகியோர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

சீரியல் நடிகர் கார்த்திக் பிறந்த நாளையொட்டி நண்பர்களுடன் மஹதியில் உள்ள குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு நடிகை ரச்சனா, ஜீவன் உள்ளிட்டோர் காரில் சென்றுள்ளனர்.  காரை ஓட்டி வந்த கார்த்திக் பனடா பெங்களூரு சாலை ஓரத்தில் பார்க் செய்ய முயன்ற போது வேகமாக வந்த சரக்கு லாரி கார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரச்சனா, ஜீவன் ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த ரஞ்சித், எரிக், ஹானஸ், உத்தம் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மஹதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

23 வயதான ரச்சனா மஹாநதி, மதுபாலா, திரிவேணி சங்கமா உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்ட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.  25 வயதான ஜீவன் 40க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், 100க்கும் அதிகமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கன்னட தொலைக்காட்சியில் சுதீப் நடத்த உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்க தேர்வாகி இருந்தார்.