காதலன் படத்தில் இடம்பெற்றிருந்த ஊர்வசி, ஊர்வசி பாடலை இன்றைய சூழலுக்கேற்ற வகையில் மாற்றி புதிதாக வெளியிட்டுள்ளார் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்.
கடந்த 1997ம் ஆண்டு வெளியான காதலன் படத்தில் இடம் பெற்றிருந்த ஊர்வசி ஊர்வசி பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது. இந்த பாடல் வரிகளை இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க ரசிகர்கள் உதவ வேண்டும் என்று கடந்த டிசம்பரில் பேஸ்புக் மூலம் ரஹ்மான் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து ரசிகர்கள் உதவியிடன் எழுதப்பட்ட அந்த பாடலை இசைநிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். அதில், டொனால்ட் ட்ரம்ப் பிரசிடண்ட் ஆனால், டேக் இட் ஈசி ஊர்வசி, ஐந்நூறு ரூபாய் செல்லாமல் போனால் டேக் இட் ஈசி ஊர்வசி என இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்றபடி எழுதப்பட்ட லேட்டஸ்ட் ஊர்வசி பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.