த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் 'பரமபதம் விளையாட்டு' படத்தின் ஷூட்டிங் ராபர்ட் கிளைவ் கெஸ்ட் ஹவுஸில் நடந்து வருகிறது.
ஹரி இயக்கிய ’சாமி 2’ படத்தில் இருந்து விலகிய த்ரிஷா, இப்போது ’பரமபதம் விளையாட்டு’ என்ற படத்தில் நடித்துவருகிறார். நந்தா, ரிச்சர்ட் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் த்ரில்லர். புதுமுகம் திருஞானம் இயக்கும் இந்தப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். அம்ரேஷ் கணேஷ் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு, 200 வருடம் பழமை வாய்ந்த ஏற்காட்டில் உள்ள பங்களாவில் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. இந்த பங்களா, பிரிட்டீஷ் இந்தியா காலத்தில் ராபர்ட் கிளைவ் வந்து தங்கும் பங்களா என்று கூறப்படுகிறது. இந்த படத்தை 24HRS நிறுவனம் தயாரிக்கிறது.