அனைவரும் கைகோர்த்து, குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் நடைபெற்ற பேரணியில் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன், தொழிலாளர் நலத்துறை ஆணையர் நந்தகோபால், யுனிசெப் தூதுவரான நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களுடன் த்ரிஷா உள்ளிட்டோர் பேரணியாகச் சென்றனர்.
அப்போது பேசிய திரிஷா, ’எளிதில் சுரண்டப்படக் கூடியவர்களாகக் குழந்தைகள் இருப்பதால்தான், அவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். குழந்தைகளின் நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை, குழந்தைத் தொழில் பாதிக்கும். இது ஈடுசெய்ய முடியாத இழப்புக ளையும் ஏற்படுத்தும். அனைவரும் கைகோர்த்து, குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கடந்த 10 ஆண் டுகளில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. அதற்காக தொழிலாளர் நலத்துறைக்கு எனது பாராட்டுக் கள்’ என்றார்