சினிமா

கண்ணை கட்டிக் கொண்டு தலைகீழாகவே த்ரிஷா படத்தை அழகாக வரைந்து அசத்தல் - வீடியோ

கண்ணை கட்டிக் கொண்டு தலைகீழாகவே த்ரிஷா படத்தை அழகாக வரைந்து அசத்தல் - வீடியோ

Sinekadhara

நடிகர் நடிகைகளின் ஓவியங்களை ரசிகர்கள் வித்தியாசமாக வரைந்து அவர்களை ஆச்சர்யப்படுத்துவது வழக்கம். ஒருவரைப் பார்த்து வரைவது நிறையப்பேருக்கு கைவந்த கலை. ஆனால் கண்களைக் கட்டிக்கொண்டு, தலைகீழாக ஒருவரின் உருவத்தை வரைவது என்பது அவ்வளவு எளிதல்ல.

நடிகை திரிஷாவின் ஓவியத்தை வித்தியாசமான வரைந்து அசத்தியுள்ளார் ஒரு இளைஞர். கண்களைக் கட்டிக்கொண்டு வெள்ளைபோர்டில், பேனாவால் திரிஷாவின் ஓவியத்தைத் தலைகீழாக வரைந்துள்ளார். '96' திரைப்படத்தின் பிண்ணனி இசையுடன் வருகிற அந்த வீடியோவை ’லவ் திஸ்... தேங்க்யூ சோ மச்’ எனக் குறிப்பிட்டு திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

52 நொடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோவை, பகிரப்பட்ட ஒருமணி நேரத்திற்குள் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 280க்கும் அதிகமானோர் ரீட்வீட் செய்துள்ளனர்.