ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அப்படத்திற்கான தமிழக வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தில் சந்தித்த விமர்சனங்களுக்கு பிறகு கேம் சேஞ்சரை திரைக்கு கொண்டு வருகிறார், இயக்குநர் ஷங்கர். ட்ரெய்லர் வெளியான பின்னர், படத்தின் மீதான நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
இந்நிலையில், இந்தியன் படத்தின் 3 ஆம் பாகத்தை நிறைவு செய்த பின்னரே கேம் சேஞ்சர் படத்தை வெளியிட வேண்டுமென, லைகா நிறுவனம் நிர்பந்திப்பதாக தகவல்கள் வெளியாயுள்ளன. இந்தியன் 3, முழுமையாக நிறைவு செய்யப்படாத நிலையில், அதை முடித்துக் கொடுக்க ஷங்கர் கூடுதலாக 65 கோடி ரூபாய் கேட்பதாக திரைத்துறை கூட்டமைப்பிடம் லைகா நிறுவனம் முறையிட்டுள்ளது.
இதுகுறித்து 4 நாட்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், கேம் சேஞ்சர் படத்தின் திரையரங்க ஒப்பந்தம், தமிழகத்தில் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. பட வெளியீட்டுக்கு 3 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் கேம் சேஞ்சர் வெளியீடு தள்ளிப்போகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது...