Tovino Thomas
Tovino Thomas Twitter
சினிமா

"டோவினோ தாமஸ்"-க்கு ஆசியாவின் சிறந்த நடிகருக்கான விருது! எந்த படத்திற்கு தெரியுமா?

webteam

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ். இவர் நடித்த மின்னல் முரளி, கல்கி, தள்ளுமல்லா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தமிழில் தனுசுடன் மாரி 2 படத்தில் நடித்திருந்தார்.

Tovino Thomas

இந்நிலையில் கடந்த மே மாதம் இவர் நடித்த 2018: எவேரிஒன் இஸ் அ ஹீரோ திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இந்த படத்தில் டோவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, வினித் சீனிவாசன், கலையரசன், நரேன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

“2018” திரைப்படத்திற்கு சிறந்த ஆசிய நடிகருக்கான விருது!

கேரளாவில் 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “2018” திரைப்படம், அனைத்து மொழி ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் டோவினோவின் கதாபாத்திரம் எல்லோராலும் பாராட்டப்பட்டது.

Tovino Thomas

இந்நிலையில் நெதர்லாந்தில் நடைபெற்ற செப்டிமியஸ் விருது விழாவில் டோவினோ தாமஸ்-க்கு ஆசியாவின் சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தற்போது இந்த படத்தை இந்தியா சார்பில் ஆஸ்கார் போட்டிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.