சினிமா

’மிஷன் இம்பாசிபிள்’ ஷூட்டிங்கில் விபத்து: டாம் குரூஸ் படுகாயம்

’மிஷன் இம்பாசிபிள்’ ஷூட்டிங்கில் விபத்து: டாம் குரூஸ் படுகாயம்

webteam

படப்பிடிப்பில் நடந்த விபத்தில் பிரபல ஹாலிவுட் ஹீரோ, டாம் குரூஸ் படுகாயமடைந்தார். 

ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ’மிஸன் இம்பாசிபிள்’ படத்துக்கும் கண்டிப்பாக இடம் இருக்கும். ஆக்‌ஷன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் அடுத்தடுத்தப் பாகங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி வசூலிலும் சாதனை படைத்தன. இப்போது இந்த படத்தின் ஆறாம் பாகம், உருவாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது. நேற்று நடந்த படப்பிடிப்பில் ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்துக்கு படத்தின் ஹீரோ, டாம் குரூஸ் தாவுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக கயிறு கட்டப்பட்டிருந்தது. அதில் தொங்கியபடி எதிரில் இருக்கும் கட்டிடத்தில் குரூஸ் குதிக்க வேண்டும். ஆனால், டைமிங் மிஸ் ஆனதால் எதிர்பாராதவிதமாக எதிரில் இருந்த கட்டிடத்தின் மீது அவர் மோதிவிட்டார். இதனால் நிலை தடுமாறிய அவர் கட்டிடத்தின் விளிம்பில் சுவரைப் பிடித்து தொங்கியபடி இருந்தார். அவரை படக்குழுவினர் உடனடியாகக் காப்பாற்றினர். இதில் அவர் காலிலும் நெஞ்சிலும் பலத்தக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.