சுஷாந்தின் பிரேதபரிசோதனை அறிக்கையில் அவரின் இறப்புநேரம் குறிப்பிடப்படவில்லை என்று சுஷாந்த் குடும்ப வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறியுள்ளார்.
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்ப வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறும்போது “ சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது இறப்பு நேரம் குறிப்பிடப்படவில்லை. "இது ஒரு முக்கியமான விபரம்". அவர் கொல்லப்பட்ட பின்னர் தூக்கிலிடப்பட்டாரா அல்லது தூக்குப்போட்டு இறந்தாரா என்பதை இறப்பு நேரம் மூலமாகத்தான் அறியமுடியும்" என்று கூறினார். மும்பையிலுள்ள டாக்டர் ஆர்.என். கூப்பர் நகராட்சி பொது மருத்துவமனையில்தான் சுஷாந்தின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.