சினிமா

ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் குடியரசு தினத்தில் வெளியீடு

ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் குடியரசு தினத்தில் வெளியீடு

webteam

ஜெயம் ரவி நடித்துள்ள புதிய திரைப்படமான டிக் டிக் டிக் குடியரசு தினத்தன்று வெளியிடப்பட உள்ளது. இதற்கான அறிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

மிருதன் படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் எடுத்திருக்கும் திரைப்படம் 'டிக் டிக் டிக்'. இது ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் மூவி. விண்வெளி சம்பந்தப்பட்ட கதை என்று முன்பே தகவல் வெளியானது. நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார். மிக முக்கியமாக ஜெயம் ரவி மகன் ஆரவ் நடித்திருக்கிறார். அவரது மகன் இடம் பெற்றுள்ள காட்சி ட்ரெய்லரிலும் இடம் பிடித்திருந்தது. இதை நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹதேஷ் ஜபக் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் “எதிர்பார்ப்பான ஒரு அறிவிப்பு. டிக் டிக் டிக் திரைப்படம் வரும் குடியரசு தினமான ஜனவரி 26 அன்று வெளியாக உள்ளது. இந்தியாவின் முதல் விண்வெளி சம்பந்தமான இந்தப் படத்தைக் காணத் தயாராக இருங்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.