சினிமா

"டிக் டிக் டிக்" பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு

"டிக் டிக் டிக்" பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு

Rasus

டிக் டிக் டிக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது.

வனமகன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் "டிக் டிக் டிக்". சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி வரும் இப்படம், தமிழ் திரையுலகில் முழுக்க முழுக்க விண்வெளி சார்ந்த முதல் த்ரில்லர் படமாகும். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முழுவதுமாக முடிந்துவிட்ட சூழலில் நாளை (ஜூலை 17) காலை 11 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் படத்தின் இசையமைப்பாளரான டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில்,  டிக் டிக் டிக் படத்தின் டீஸரை தான் பார்வையிட்டபோது மெய்மறந்து வானத்தில் பறப்பதை போன்று உணர்ந்ததாக தெரிவித்திருந்தார். படத்தின் டீஸரும் விரைவில் வெளியாகும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமான அரங்கு அமைத்து அதற்குள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.