ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம், 13 நாட்களில் 750 கோடியை கடந்தது. உலகளாவிய வசூல் 800 கோடியை நெருங்கியுள்ள நிலையில், தமிழ் சினிமாவின் வரலாற்றில் 700 கோடியை கடந்த முதல் படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறியிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம், அதனுடைய வெற்றி ஓட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறது. காமெடி - ஆக்ஷன் என திரையில் பட்டாசாய் வெடித்த ஜெயிலர் 2 திரைப்படம் 700 கோடியை வசூலித்த முதல் தமிழ்படமாக சாதனை படைத்துள்ளது. இந்தசூழலில் 13 நாள் முடிவில் 750 கோடியை கடந்து வெற்றிகரமாக ஓடிவருகிறது.
பாக்ஸ் ஆஃபிஸை பொறுத்தவரையில், 13 நாள் முடிவில் ஜெயிலர் 2 திரைப்படத்தின் மொத்த இந்திய வசூல் ரூ. 486.50 கோடியாகவும், நிகர வசூல் ரூ. 415.65 கோடியாகவும் உள்ளது. வெளிநாடுகளில் இப்படம் 257.8 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதன்மூலம் அதன் உலகளாவிய வசூல் ரூ. 744 கோடியாக அதிகரித்த நிலையில், தற்போது 802 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
டைகர் முத்துவேல் பாண்டியனின் வேட்டை திரையரங்கை கடந்து வசூலிலும் பட்டையை கிளப்பி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 பாக்ஸ் ஆஃபிஸிலும் 50 கோடி வசூலை கடந்து ஜெயிலர் 2 சாதனை படைத்துள்ளது.