சினிமா

கர்நாடகாவில் காலா டிக்கெட் விற்பனை தொடங்கியது

webteam

கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது பெங்களூரில் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி படத்தை கொண்டாடினர். சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர்.

பெங்களூருவில் உள்ள பாலாஜி திரையரங்கு உள்ளிட்ட திரையரங்குகளில் இன்று காலை காலா படத்தை காண்பதற்காக ரசிகர்கள் வருகை தந்தனர். ஆனால் கன்னட அமைப்பினர் திரையரங்கு முன்பு திரண்டதோடு, ரசிகர்களையும் அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் ஏமாற்றமடைந்த ரஜினி ரசிகர்கள், நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் படத்தை திரையிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. பெங்களூருவிலுள்ள மந்த்ரி மாலில் காலா படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. போராட்டம் நடத்திய கன்னட அமைப்புகளை போலீசார் அப்புறப்படுத்திய நிலையில் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.