சினிமா

'தொரட்டி’ பட நடிகர் ஷமன் மித்ரு கொரோனாவால் உயிரிழப்பு

'தொரட்டி’ பட நடிகர் ஷமன் மித்ரு கொரோனாவால் உயிரிழப்பு

sharpana

'தொரட்டி’ பட ஹீரோவும் ஒளிப்பதிவாளருமான ஷமன் மித்ரு இன்று கொரோனாவால் உயிரிழந்தார்.

குடியால் ஏழைக்குடும்பங்கள் அழிவது குறித்து கிராமத்து மனிதர்களின் பின்னணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘தொரட்டி’ படத்தில் ஹீரோவாக நடித்து கவனம் ஈர்த்தார் நடிகர் ஷமன் மித்ரு. ஒளிப்பதிவாளரான இவர், முதன்முறையாக இப்படத்தை தயாரித்து ஹீரோவாகவும் நடித்திருந்தார். விமர்சன ரீதியாக இப்படம் பாராட்டுகளை குவித்தது.

இந்நிலையில், சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 43 வயதாகும் ஷமன் மித்ரு குரோம்பேட்டையிலுள்ள ஒரு தனியார் மத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளது திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இயக்குநர் கே.வி ஆனந்த், ரவி கே சந்திரன் ஆகியோரிடம் உதவி ஒளிப்பதிவாளராக இருந்த ஷமன் மித்ரு, விஜய் சேதுபதி கன்னடத்தில் நடித்த ‘அகண்ட’ படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு 5 வயதில் பெண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.