Coolie (Tamil) Prime - Sep 10Series
Task (English) Jio Hotstar - Sep 8
Jeremiah Zagar and Salli Richardson-Whitfiel இயக்கியுள்ள சீரிஸ் `Task'. கொள்ளையர்களை பிடிக்க துரத்தும் FBI ஏஜென்ட்ஸ் கதை.
Only Murders in the Building S5 (English) Jio Hotstar - Sep 9
Steve Martin - Martin Short - Selena Gomez நடித்து ஹிட்டான சீரிஸ் `Only Murders in the Building'. இதன் ஐந்தாவது சீசன் வெளியாகவுள்ளது. மூன்று ஸ்ட்ரேஞ்சர்ஸ், அவர்களின் குடியிருப்பில் நிகழும் கொலைக்குப் பிறகு, அமெச்சூர் டிடெக்டிவாக மாறுவதுதான் கதை.
The Girlfriend (English) Prime - Sep 10
ராபின் ரைட் இயக்கியுள்ள சீரிஸ் `The Girlfriend'. நம்ம ஊர் மாமியார் மருமகள் சண்டை தான் களம். மகனின் கேர்ள் ஃபிரெண்ட்டை, எப்படி எதிர்கொள்கிறார் தாய் என்பதே கதை.
Do You Wanna Partner (Hindi) Prime - Sep 12
Archit Kumar, Collin D’Cunha இயக்கத்தில் தமன்னா, டயானா பென்ட்டி நடித்துள்ள சீரிஸ் `Do You Wanna Partner'. இரண்டு தோழிகள் இணைந்து பீர் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் துவங்க எடுக்கும் முயற்சிகளே கதை.
Post Theatrical Digital Streaming
Su from So (Kannada) Jio Hotstar - Sep 9
ஜே பி துமிநாட் இயக்கத்தில் உருவான படம் `Su from So' அசோகா என்ற இளைஞனுக்குள், சுலோச்சனா என்ற பெண்ணின் ஆவி புகுந்தது என நம்பும் கிராமத்தினரின் கதை.
Heart Eyes (English) Prime - Sep 9
Josh Ruben இயக்கிய படம் `Heart Eyes'. Heart Eyes Killerன் கண்ணிலிருந்து தப்ப மக்கள் எடுக்கும் முயற்சிகளே கதை.
Coolie (Tamil) Prime - Sep 10
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் `கூலி'. தன் நண்பனின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முயலும் ஹீரோவின் கதை.
Meesha (Malayalam) SunNXT - Sep 11
கதிர் - சைன் டாம் சாக்கோ நடித்த படம் `Meesha'. மிதுன் தன் நண்பர்களை ஒரு விருந்துக்கு அழைக்கிறான். ஆனால் இந்த விருந்துக்கு பின் ஒரு பெரிய திட்டம் இருக்கிறது. ஆனால் விருந்துக்கு திட்டத்தோடு வருவது மிதுன் மட்டுமல்ல.
Saiyaara (Hindi) Netflix - Sep 12
மோஹித் சூரி இயக்கியுள்ள படம் `Saiyaara'. இசை கலைஞனுக்கும் அவனது காதலிக்கும் இடையேயான காதல் போராட்டமே கதை.
Theatre
Black Mail (Tamil) - Sep 12
மு மாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் `பிளாக் மெய்ல்'. ஒரு த்ரில்லர் கதைக்களமாக உருவாகியுள்ளது.
Bomb (Tamil) - Sep 12
விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா நடித்துள்ள படம் `பாம்'. ஊருக்குள் நிகழும் ஒரு இறப்பும், அதை தொடர்ந்து நடக்கும் பிரச்சனைகளும் தான் கதை.
Thanal (Tamil) - Sep 12
ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் `தணல்'. ஒரு கொள்ளை கும்பலை தடுக்க முயற்சிக்கும் காவலர்களின் கதை.
Kumara Sambavam (Tamil) - Sep 12
பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் குமரன் நடித்துள்ள படம் `குமார சம்பவம்'. ஒரு மரணத்திற்கு பின் ஏற்படும் சொத்து பிரச்சனையை காமெடி கலந்து சொல்லியிருக்கும் படம்.
Kaayal (Tamil) - Sep 12
தமயந்தி இயக்கியுள்ள படம் `காயல்'. ஆண் பெண் உறவு சிக்கலை மையப்படுத்திய படம்.
Yolo (Tamil) - Sep 12
சாம் இயக்கத்தில் தேவ் நடித்துள்ள படம் `யோலோ'.சிவா - தீக்ஷிதா இடையேயான கேள்விகளை பற்றி பேசும் படம்.
Uruttu Uruttu (Tamil) - Sep 12
பாஸ்கர் சதாசிவன் இயக்கத்தில் நாகேஷின் பேரன் கஜேஷ் நடித்துள்ள படம் `உருட்டு உருட்டு'. ஒரு பெண்ணின் காதல் எதிர்பாராத விளைவுகளை உருவாக்குவதே கதை.
Dawood (Tamil) - Sep 12
பிரஷாந்த் இயக்கத்தில் லிங்கா நடித்துள்ள படம் `தாவுத்'. எதிர்பாராத பிரச்சனையில் சிக்கும் கார் ஓட்டுனரின் பயணமே கதை.
Mirai (Telugu) - Sep 12
கார்த்திக் கட்டம்னேனி இயக்கியுள்ள படம் `Mirai'. போராளி ஒருவனுக்கு கிடைக்கும் சக்தியும், பொறுப்புமே கதைக் களம்.
Kishkindhapuri (Telugu) - Sep 12
கௌஷிக் இயக்கத்தில் பெல்லாம் கொண்டா ஸ்ரீனிவாஸ் நடித்துள்ள படம் `Kishkindhapuri'. கைவிடப்பட்ட ரேடியோ ஸ்டேஷனில் நடக்கும் மர்மமான விஷயங்களே கதை.
Heer Express (Hindi) & Ek Chatur Naar (Hindi) - Sep 12
உமேஷ் சுக்லா இயக்கியுள்ள `Heer Express' மற்றும் `Ek Chatur Naar' இரு படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. இரண்டுமே ஒரு பெண்ணை சுற்றி நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது.
Jugnuma (Hindi) - Sep 12
ராம் ரெட்டி இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ள படம் `Jugnuma;. தேவ் என்ற மனிதனின் வாழ்க்கையில் நிகழும் மோசமான சம்பவங்களை பற்றிய படம்.
Downton Abbey: The Grand Finale (English) - Sep 12
Simon Curtis இயக்கியுள்ள படம் `Downton Abbey: The Grand Finale'. மேரி என்ற பெண்ணின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களே கதை.
The Long Walk (English) - Sep 12
`Constantine', `I Am Legend' படங்களை இயக்கிய Francis Lawrence தற்போது இயக்கியுள்ள படம் `The Long Walk'. மலை ஏறும் போட்டியில் கலந்து கொள்ளும் இளைஞர்களின் கதை.