சினிமா

ஐயோ அது நான் இல்லை: கொதித்த நிவேதா பெத்துராஜ்

ஐயோ அது நான் இல்லை: கொதித்த நிவேதா பெத்துராஜ்

webteam

தனது புகைப்படம் எனக் கூறி தவறான புகைப்படங்களை மீடியா பரப்பி வருவதாக கொதித்துள்ளார் நிவேதா பெத்துராஜ். 

'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.  உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக 'பொதுவாக எம் மனசு தங்கம்' படத்தில் நடித்தார். இப்போது வெங்கட்பிரபு இயக்கியுள்ள 'பார்ட்டி' படத்திலும் நடித்துள்ளார்.

சமீபமாக சில மீடியாவில் பிகினி உடை அணிந்த நடிகை ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு, நிவேதா பெத்துராஜின் கிளாமர் போட்டோ என ஒரு புகைப்படம் வலம் வந்தது. குடும்பப்பாங்கான கேரக்டரில் நடித்துவரும் இவரது புகைப்படம் கிளாமராக இருந்ததால் சினிமா உலகில் பரபரப்பானது. ஆனால் அது தான் இல்லை என்று மறுத்திருக்கிறார் நிவேதா. 

(அந்தப் புகைப்படம்)

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’கடந்த சில நாட்களாக சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் புகை படங்களை வெளியிட்டு அது நான் தான் என்று பொய்யாக கூறி வருகின்றனர். என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதை பற்றிய கவனத்தை கொண்டு வந்தனர். இந்த செயலை வெறும் கவன குறைவான செயலாக பார்க்க முடியவில்லை. என் பெயரை கெடுக்க வேண்டும் என்றே யாரோ இவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேகப்பட வேண்டி உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் என்னை காயப்படுத்தி உள்ளது. இதன் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என முனைப்புடன் உள்ளேன்.  நடிகை என்றாலும் எங்களுக்கும் குடும்பம் உண்டு. எங்களை சார்ந்த, நாங்கள் சார்ந்த சமுதாயமும் எங்களுக்கும் உண்டு. இத்தகைய பொய் செய்திகள் எங்களுக்கு பெரிய பாதிப்பை தருகிறது. இந்த கடிதம் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் வராமல் தடுக்கும் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.