சினிமா

15 நாட்களில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு? - மாஸ் காட்டும் தனுஷ்

சங்கீதா

நடிகர் தனுஷ் - நித்யா மேனன் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 15 நாட்களிலேயே 110 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 4-வது முறையாக கூட்டணி அமைத்து நடித்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. காதல், பாசம், கோபம், தந்தை -மகன், தாத்தா - பேரன் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு, கடந்த மாதம் 18-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அனிருத்தின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்ததால், படம் எதிர்பார்த்ததைவிட வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 15 நாட்களிலேயே 110 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. விக்ரமின் ‘கோப்ரா’ படத்தால், ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் வசூல் பாதிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், ‘கோப்ரா’ படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால், தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மொத்தமாக 130 கோடி ரூபாயாவது இந்தத் திரைப்படம் வசூலிக்கும் என்று நிபுணாகள் கூறிவருகின்றனர். இதனால் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. மேலும் படக்குழுவை இயக்குநர் ஷங்கர் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.