சினிமா

”உங்களை கண்டாலே ஓடுகிறார்கள்” - விஷால் மீது நடிகை காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு

”உங்களை கண்டாலே ஓடுகிறார்கள்” - விஷால் மீது நடிகை காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு

webteam

நடிகர் விஷால் மீது நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, “சினிமா துறையை பொறுத்தவரையில் முதலில் கண்டிக்கப்பட வேண்டியவர்கள், பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுப்பவர்களைத்தான். விஷால், சினிமாவில் புதிதாக நுழையும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள். துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படும் மூத்த பெண் நடிகர்களை பாருங்கள்.

நீங்களும் உங்களது நண்பர்களும் அந்த இடத்தில் இருந்து வந்தவர்கள்தான். பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடுவீர்கள். உங்களால் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சினிமா துறையில் உதவித்தேவைப்படும் பெண்களுக்குத் துணையாக உங்கள் வீரத்தை நீங்கள் காண்பித்து இருக்க வேண்டும். ஆனால் நடப்பதோ வேறாக இருக்கிறது.

உங்களது தொடர் அணுகுமுறையால், மூத்த பெண் நடிகர்கள் உங்களைக் கண்டாலே ஓடுகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.