சினிமா

தெருக்குரல் அறிவு - யுவன் கூட்டணியில் ‘Dont Touch Me’ பாடல் வெளியீடு

தெருக்குரல் அறிவு - யுவன் கூட்டணியில் ‘Dont Touch Me’ பாடல் வெளியீடு

JustinDurai
தெருக்குரல் அறிவு - யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவான ‘Dont Touch Me’ பாடல் இன்று வெளியாகியுள்ளது.
பிரபல ராப் பாடகரான 'தெருக்குரல்' அறிவு, இடஒதுக்கீடு குறித்தும், சமூகப் பிரச்னைகளுக்கு எதிராகவும் பாடல்கள் மூலம் மிக அழுத்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர். இன்றும் வைரல் லிஸ்டில் இருக்கும் ‘'என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் தெருக்குரல் அறிவு சேர்ந்து பாடியிருந்தனர்.
இந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெருக்குரல் அறிவு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் கூட்டணி அமைத்துள்ளார், ‘Dont Touch Me’ என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலை யுவன், தனது யு1 ரெக்கார்ட்ஸ் மூலமாகத் தயாரித்துள்ளார். இந்த நிலையில் ‘Dont Touch Me’ பாடல் இன்று வெளியாகியிருக்கிறது. இது சம்மந்தமான அறிவிப்பையும் அறிவு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு பாடல் ஆக உருவாகியுள்ளது.