இசையமைப்பாளர் பரணி, இசை அமைத்து, இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம், ‘ஒண்டிக்கட்ட’. ஃபிரண்ட்ஸ் சினி
மீடியா சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி இணைந்து தயாரிக்கின்றனர். விக்ரம்
ஜெகதீஷ், நேகா, தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், சென்ராயன், மதுமிதா உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு, ஆலிவர்
டெனி. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
இதில் இசை அமைப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார், தினா, சத்யா, இயக்குனர்கள் மனோஜ்குமார், சக்தி சிதம்பரம், சென்ராயன்
உட்பட பலர் கலந்துகொண்டனர். எஸ்.ஏ.ராஜ்குமார் பேசும்போது, ‘இசை அமைப்பாளனுக்குள் இயக்குனர் இருப்பது இயல்பான
விஷயம்தான். சினிமா பாடல்களை எப்படி கொடுக்கிறோம் அப்படிங்கறதுதான் முக்கியம். பாட்டுக்கு எந்த காலத்துலயும்
டிரெண்டுங்கறதே கிடையாது. முட்டாள்தனமா சொல்லிட்டு இருக்காங்க. இப்ப சிலர், கொத்துப் பரோட்டா போல, ஒரே
மாதிரி பீட்டு, இபப்டித்தான் போடணும்னு போலன்னு நிறைய குப்பையை தள்ளிட்டு இருக்காங்க. பாடல் அப்படி இருக்கக்
கூடாது. நம்ம கலாசாரம், கதையின் உண்மையான உணர்வு, கதை என்ன கேட்குது, கதாபாத்திர தன்மை என்ன,
இப்படித்தான் பாடல் பண்ணுவோம். அதை இந்தப் படத்துல பரணி பண்ணியிருக்கார். அந்த உழைப்புக்கும்
உண்மைக்காகவுமே இந்தப் படம் வெற்றிபெறும்’ என்றார்.