பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் பெயரில் அமெரிக்காவில் உள்ள ஓட்டல் ஒன்றில் தோசை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழில் 'கோச்சடையான்' படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் இந்தி நடிகை தீபிகா படுகோன். இவர் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கிகை சமீபத்தில் திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் இத்தாலியில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.
பின் னர் மும்பையில் திரைத்துறையினருக்கு அவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினார். இப்போது இருவரும் ஹனிமூனுக்காக வெளி நாடு சென்றுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில், 'தோசா லேப்ஸ்' என்ற ஓட்டலில் தீபிகா படுகோன் பெயரில் தோசை வகை அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
இதில் உருளைக்கிழங்கு மிக்ஸ், மிளகாய் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தீபிகா, ’‘இப்படியொரு பெருமையுடன் இந்த புத்தாண்டு பிறந்திருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இன்னொரு ரசிகர் ஒருவர், ஒரு புகைப்படத்தை டேக் செய்து, ‘’உங்கள் பெயரில் புனேவில் ஏற்கனவே பரந்தா தாளி இருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு கீழே தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங், ’நான் அதை சாப்பிடுவேன்’ என்று கிண்டலாகத் தெரிவித்துள் ளார்.