சினிமா

ரகுல்ப்ரீத் சிங்குடன் நடித்த காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது:கார்த்தி கலகல

ரகுல்ப்ரீத் சிங்குடன் நடித்த காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது:கார்த்தி கலகல

webteam

ரகுல் ப்ரீத் சிங்குடன் நான் நடித்த காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். 


தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கான ஊடக சந்திப்பு நடந்தது. அதில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். அப்போது “இந்தப் படம் வழக்கமான போலீஸ் படங்களில் இருந்து முற்றிலும் புதுமையான படமாக இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பின் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான்,ஜெய்சால்மர் ஊர்களுக்கு சென்றோம். அங்கே கடுமையான வெயில்.கூடவே இரவில் கடுமையான குளிர்.அதை தாங்கிக் கொண்டு படபிடிப்பு நடத்தினோம். இக்கதையை நான் சிறுத்தை படபிடிப்பில் இருந்தபோது கேட்டேன். கொஞ்ச காலம் கழித்து மீண்டும் என்னிடம் வந்தது. நம்மை சுற்றிச் சுற்றியே இந்தக் கதை வந்து கொண்டு இருக்கிறதே என்று  யோசித்தேன். உடனே இதில் நாம் நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன்.
நாம் தெருவில் நடந்து போகும்போது எதிரே வருகிறவர் யாரும் நம்முடைய கண்களை பார்க்க மாட்டார்கள். அதை தாண்டி ஒருவர் உங்களுடைய கண்களை பார்ப்பார். அவரிடம் போய் பேசினால் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை சொல்லுவார். இதை பலரும் நம்புகிறார்கள். அதிகம் படித்த என் நண்பர்களே நம்புகிறார்கள். அதை போலதான் இந்தக் கதையும்.என்னை சுற்றியே வந்துக்கொண்டே இருந்தது.” என்றார்.

மேலும் அவர் “ரகுல் ப்ரீத் சிங் உடன் நான் நடித்த காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ரசிக்கும்படி இந்தப் படத்தின் காட்சிகள் இருக்கும். என் கதாபாத்திரத்தில் எந்தப் போலீஸ் படத்தின் சாயலும் இருக்காது” என்றும் கார்த்தி கூறினார்.